Posts

Showing posts with the label Purattasi Sani 2022

புரட்டாசி சனிக்கிழமைகள் - Purattasi Sani 2022

Image
பொதுவாக சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமை மிகுந்த சிறப்புவாய்ந்த நாள் ஆகும். இந்த நாளில் பெரும்பாலான வீடுகளில் தளிகை போடுவது வழக்கம். இதில் தளியல் வடை, கொண்டை கடலை, முருங்கை கீரை பொரியல் மேலும் வாழையிலையில் நிறைந்த காய்கறிகள், பாசிப்பருப்பு பாயாசம், உருளைக்கிழங்கு வறுவல், தயிர்சாதம், பொங்கல், எலுமிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் உள்ளிட்டவைகளை செய்து படையில் இட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது நல்லது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் 2022: 24ம் தேதி செப்டம்பர் 2022  - ( முதல் சனிக்கிழமை ) 1ம் தேதி அக்டோபர் 2022 -  ( இரண்டாம் சனிக்கிழமை ) 8 ம் தேதி அக்டோபர் 2022 -  ( மூன்றாவது சனிக்கிழமை ) 15 ம் தேதி அக்டோபர் 2022 -  ( நான்காவது மற்றும் கடைசி சனிக்கிழமை )