புது மாடல் சுடிதார் டிசைன்கள் - Chudidar Designs 2022

இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பும் உடையாக சுடிதார் மாறி விட்டது. அதை அணிவது ‌மிகவும் எளிமை, குறைவான ‌நேரத்தையே எடுத்துக் கொள்ளும் என பல காரணங்களால் சுடிதார் அனைத்து வயதினரும் விரும்பும் உடையாக மாறிவிட்டது.

இப்போது ‌மார்கெட்டில் விதவிதமான சுடிதார்கள் கிடைக்கின்றன. யார் எந்த மாதிரியான சுடிதார் அணியலாம், எவ்வாறு உடுத்தலாம், எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று சில குறிப்புகளை பார்க்கலாம்.


முதலில் இப்போது மார்கெட்டில் டிரெண்டிங்கா இருப்பது ரெடி ‌டு வியர் அல்லது சுடிதார் செட் என்று கிடைக்கிறது. அது மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் மெட்டிரியல் எடுத்து தைப்பது அல்லது தனித்தனியாக சுடிதார், பேண்ட், ஷால் வாங்குவது என்று அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ரெடி ‌டு வியர் சுடிதார்கள் மிகவும் விலை குறைவாக இருப்பதோடு பார்ப்பதற்கும் கிராண்ட் லுக் தருகிறது. ரெடி ‌டு வியர் சுடிதார்களில் துப்பட்டா மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால் அந்த முழு சுடிதாரும் ‌பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.


முதலில்  உயரம் அதிகமாக உள்ளவர்கள் ஃபுல் ஃப்ராக் மாதிரியான சுடிதார்களை அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும். அம்பர்லா கட்டிங், ஓவர் கோட் போன்ற சுடிதார்களை அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும்.

உயரம் குறைவாக உள்ளவர்கள் ஸ்ரைட் கட் சுடிதார்களை  அணியும் போது பார்பதற்கு நன்றாக இருக்கும். அவர்கள் ஃபுல் ஃப்ராக் மாதிரியான சுடிதார்களை தவிர்த்து விடுங்கள். ஃபுல் ஓவர் கோட் சுடிதார்கள் அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

சுடிதார் யார்யார் எப்படி ‌‌அணியலாம் என்று பார்ப்போம்:

உயரம் அதிகமாக உள்ளவர்கள் ‌உடல் முழுவதும்  டிஸைன் உள்ள மாதிரியான சுடிதார்களை அணியலாம். அதற்கு அவர்கள் பிளாஸோ பேண்ட் அணியும் போது மிகவும் நன்றாக இருக்கும்.
நெக் டிஸைனை பொருத்தவரை அவர்கள் ‌டீப் நெக் அல்லது காலர் டைப் பயன்படுத்தலாம்.துப்பட்டாவை பொருத்தவரை சில்க் மெட்டிரியல் துப்பட்டாவை தேர்ந்தெடுக்கலாம்.

உயரம் குறைவாக உள்ளவர்கள் நெக்கில் மட்டும் டிஸைன் உடைய பிளைன் சுடிதார்களை அணியலாம் யோக் நெக், வீ நெக் சுடிதார்களை அணியலாம் அல்லது உடல் முழுவதும் சிறுசிறு பூக்கள் உள்ள சுடிதார்கள் நன்றாக இருக்கும். பேண்ட் பொருத்தவரை லெக்கின்ஸ், பென்சில் கட் பேண்ட் நன்றாக இருக்கும். துப்பட்டா வாங்கும் போது சாஃப்ட் மெட்டிரியலில் முழுவதும் டிஸைன் உள்ளதை‌ வாங்கலாம்.

இப்போது இருக்கும் புது டிரெண்ட் துப்பட்டாவை கிராண்ட் கா போடுவதுதான். அதாவது டாப் மற்றும் பாட்டத்தை சிம்பிளாக போட்டு துப்பட்டாவை கிராண்ட்கா போடுவதுதான். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

Comments

  1. Chudidar is the most comfortable dress for young and middle age women

    ReplyDelete

Post a Comment