கோவின் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்ப்பது, திருத்தம், பதிவிறக்கம் செய்வது எப்படி?
கொரோனா பெருந்தொற்று தற்போது மூன்றாவது அலையில் உச்சம் தொட்டு உள்ள நிலையில் நம்மில் பலர் தடுப்பூசி எடுத்து கொண்டு உள்ளோம். அவ்வாறு போட்டுக்கொண்ட தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் https://www.cowin.gov.in என்ற இனணயதளத்திற்க்கு செல்லவும். உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழி கடைசியாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.
Sign in செய்வதற்கு பதிவு/உள்ள நுழைக பொத்தானை அழுத்தவும். பிறகு உங்கள் மொபைல் நம்பர் என்டர் செய்யும்.
நீங்கள் எந்த மொபைல் நம்பர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது மருத்துவமனையில் கொடுத்தீர்களோ அந்த நம்பரையே கொடுக்கவும். பிறகு உங்கள் மொபைல் நம்பர் வந்த OTP எனப்படும் ஆறு இலக்க குறுஞ்செய்தியை பதிவிடவும்.
பெயர் சேர்க்க மற்றும் தடுப்பூசிக்கு புக்கிங் செய்ய:
உங்கள் பெயரை சேர்க்க விரும்பினால் அங்கத்திரை சேர் என்ற பொத்தானை அழுத்தி கீழே காணும் விவரங்கள் கொடுக்கவும்.
பெயர் திருத்தம் அல்லது பாஸ்போர்ட் நம்பரை சான்றிதழோடு சேர்க்க:
உங்களுக்கு வலது மூலையில் Raise an issue அல்லது தமிழ் மொழியில் ஒரு சிக்கலை எழுப்புங்கள் என்ற பொத்தானை அழுத்தவும்.
உங்கள் தடுப்பூசி சான்றிதழை பாஸ்போர்ட் உடன் சேர்க்க எனது தடுப்பூசி சான்றிதழ் பாஸ்போட் விவரங்களை சேர்க்கவும் என்ற பொத்தானை அழுத்தவும் அல்லது பெயர் சரிபார்ப்பு திருத்தம் செய்ய விரும்புவோர் பெயர்/வயது/பாலினம்/புகைப்படம் ஐடி தொடர்பான சான்றிதழ் திருத்தம் என்ற முதல் பொத்தானை அழுத்தவும்.
குறிப்பு: வெளிநாடு செல்வோர் பாஸ்போர்ட்டில் உள்ளது போலவே உங்கள் தடுப்பூசி சான்றிதழிலும் பெயர் இருக்க வேண்டும்.
பாஸ்போர்ட் விவரங்களை சேர்க்கவும்:
கீழே காணும் விவரங்களை உங்கள் பாஸ்போர்ட்டை பார்த்து பூர்த்தி செய்த பிறகு தொடரவும் பொத்தானை அழுத்தவும்.
கோரிக்கை பின்தொடர்தல்:
தற்போது
நீங்கள் செய்த திருத்தையோ அல்லது பாஸ்போர்ட் நம்பர் அப்டேட் செய்ததையோ
கோரிக்கை பின்தொடர்தல் என்ற பொத்தானை அழுத்தி அதன் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு தகவல் வரும். நீங்கள் டவுன்லோட் செய்ய சான்றிதழ் தயாராகிவிடும். பிறகு நீங்கள் show certificate என்ற பட்டனை அழுத்தவும் பிறகு பதிவிறக்கம் என்ற பொத்தானை அழுத்தி PDF வடிவில் சான்றிதழ் பெறலாம். சர்வதேச பயண சான்றிதழுக்கு இதே முறையில் பக்கத்தில் உள்ள International Travel Certificate பட்டனை அழுத்தி மேற்கண்ட அதே முறையில் தொடரவும்.
Comments
Post a Comment