நடிகர் அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி தள்ளி போனது

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருந்த வலிமை திரைபடத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரசிகர்கள் இணையத்தில் #வலிமையேவெல்லும், #ValimaiPostponed என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் நடிகர் அஜித்க்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

Comments