Posts

Showing posts with the label அஜித்

முழு வலிமையுடன் திரை இறங்க தாயாரான அஜித்தின் வலிமை!

Image
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைபடத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பல்வேறு இடையூறுகளை தாண்டி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வலிமை திரைபடம் வெளியிடப்படவுள்ளது. இதனிடையே தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இன்று நடைபெற்ற முதலமைச்சருடனான அமைச்சரவை கூட்டத்தில் சில கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே அஜித்தின் வலிமை படத்துக்கு கேட் பாஸ் கிடைத்துவிட்டது என்றே கூறலாம். இனி ரசிகர்கள் வலிமை படத்தை வெள்ளி திரையில் காண காத்து இருக்கிறார்கள்.

நடிகர் அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி தள்ளி போனது

Image
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருந்த வலிமை திரைபடத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரசிகர்கள் இணையத்தில் #வலிமையேவெல்லும், #ValimaiPostponed என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் நடிகர் அஜித்க்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

தல தப்புமா..? #வலிமையேவெல்லும் ஹாஸ்டேக் ஆன்லைனில் ட்ரெண்டிங்

Image
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள வலிமை திரைபடத்தின் ரிலிஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு. போணிகபூர் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உண்டாகும் படம் வலிமை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில். கொரோனா தொற்று வேகமெடுத்து தொடங்கியதை அடுத்த தமிழக அரசு 50% பார்வையாளர்கள் மற்றும் இரவுநேர, வார இறுதியில் ஊரடங்கு அறிவித்து உள்ளது. இதனை அடுத்து கட்டுப்பாடுகளுடன் படம் வெளிவர வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று சினிமா தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான வலிமை டீச்சர்க்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரசிகர்கள் ஆன்லைன் #வலிமையேவெல்லும் என்ற ஹாஸ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே படத்தின் வெளியாகும் தேதி குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் வெளியிட படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.