தல தப்புமா..? #வலிமையேவெல்லும் ஹாஸ்டேக் ஆன்லைனில் ட்ரெண்டிங்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள வலிமை திரைபடத்தின் ரிலிஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு. போணிகபூர் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உண்டாகும் படம் வலிமை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில். கொரோனா தொற்று வேகமெடுத்து தொடங்கியதை அடுத்த தமிழக அரசு 50% பார்வையாளர்கள் மற்றும் இரவுநேர, வார இறுதியில் ஊரடங்கு அறிவித்து உள்ளது. இதனை அடுத்து கட்டுப்பாடுகளுடன் படம் வெளிவர வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று சினிமா தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான வலிமை
டீச்சர்க்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம்
ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரசிகர்கள் ஆன்லைன்
#வலிமையேவெல்லும் என்ற ஹாஸ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே
படத்தின் வெளியாகும் தேதி குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் பட
தயாரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் வெளியிட படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment