முழு வலிமையுடன் திரை இறங்க தாயாரான அஜித்தின் வலிமை!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைபடத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பல்வேறு இடையூறுகளை தாண்டி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வலிமை திரைபடம் வெளியிடப்படவுள்ளது.
இதனிடையே தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இன்று நடைபெற்ற முதலமைச்சருடனான அமைச்சரவை கூட்டத்தில் சில கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே அஜித்தின் வலிமை படத்துக்கு கேட் பாஸ் கிடைத்துவிட்டது என்றே கூறலாம். இனி ரசிகர்கள் வலிமை படத்தை வெள்ளி திரையில் காண காத்து இருக்கிறார்கள்.
Comments
Post a Comment