பெண்களே வீட்டு வேலைகளை எளிமையாக செய்வது எப்படி?

நமது தாத்தா பாட்டி காலங்களில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். அதனால் வீட்டீல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை செய்ய வீட்டு வேலை எளிமையாக, மனஅழுத்தமின்றி, ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே சுலபமாக வேலையை செய்து முடிப்பார்கள். ஆனால் இன்றோ நாம் தனிகுடும்ப வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு ‌வீட்டு வேலைகளை தனியாக செய்யும் போது நிறைய  மனஅழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறோம். அவ்வாறு மன அழுத்தம் இன்றி எளிமையாக வீட்டு வேலைகளை செய்ய சில குறிப்புகளை பார்க்கலாம்.


 
1.பாத்திரம் கழுவுதல்:

வீட்டு வேலைகளில் பாத்திரங்களை கழுவுதல் சிறு கடினமானது தான். அவ்வாறு நீங்கள் பாத்திரங்கள் கழுவும் போது சேர்த்து வைத்து கழுவாமல் உடனுக்குடன் கழுவி விடுங்கள்.‌நிறைய பாத்திரங்களை சேர்த்து வைத்து கழுவும் போது உடலும் சோர்வாகி விடும். நேரமும் அதிகம் எடுத்துக் கொள்ளும். இரவில் படுக்க செல்லும் முன்னர் பாத்திரங்களை கழுவிவிட்டு படுங்கள் அப்படி செய்தால் காலையில் மன அழுத்தம் இன்றி எழலாம்.

2.வீட்டை சுத்தம் செய்தல்:

வீட்டை தினமும் கூட்டாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் கூட்டுங்கள். தேவைப்பட்டால் வரவேற்பு அறை, சாமியறை, சமைக்கும் அறையை மட்டும் தினமும் கூட்டுங்கள்.குழந்தைகள் இருந்தால் அவர்கள் சிதற வைத்திருக்கும் பொம்மைகளை சேர்த்து வைத்து எடுக்காமல் உடனுக்குடன் எடுத்து வைத்து விடுங்கள். வாரத்திற்கு ஒருமுறை வீட்டை துடைத்து கொள்ளுங்கள். குழந்தைகள் சாப்பிட்டோ அல்லது ஏதேனும் விளையாண்டோ பொருட்கள் சிந்தி இருந்தால் உடனே அதை கூட்டி அந்த இடத்தை மட்டும் துணி வைத்து துடைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் வீடு பார்ப்பதற்கு மிகவும் சுத்தமாக இருக்கும், நமக்கும் வேலை எளிமையாக முடியும்.

3.சமையல்   

முடிந்த வரை காலை வேளையிலையே மதியத்திற்கும் சேர்த்து சமைத்து விடுங்கள். அவ்வாறு செய்வதால் நிறைய நேரம் மிச்சம் ஆகும்,பிறகு இரவுதான் சமையல் வேலை வரும். நாளை என்ன சமையல் செய்ய வேண்டும் அதற்கான பொருட்கள் உள்ளதா என்பதை முதல் நாளே முடிவு செய்து கொள்ளுங்கள். இதனால் மறுநாள் சிரமமின்றி சமைத்து முடிக்கலாம். எடுத்துக்காட்டாக நீங்கள் நாளை மதிய உணவிற்கு சாம்பார் வைக்கலாம் என்று நினைத்திருந்தால், காலையில் பொங்கல், இட்லி, தோசை இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து இந்த சாம்பாரை பயன்படுத்தி கொள்ளுங்கள். தனியாக சட்னி என்று எதுவும் செய்ய வேண்டாம். இவ்வாறு செய்வதால் நமக்கு வேலையும் குறையும், ஆரோக்கியமான உணவும் கிடைக்கும்.

4.குளியலறை, கழிவறை சுத்தம் செய்தல்

வாரத்தில் ஒரு நாள் இதற்காக ஒதுக்கி அன்று இந்த வேலைகளை பார்க்கலாம். அதுமட்டும் அல்லாமல் தினமும் நாம் குளித்து முடித்தவுடன், நீளமான கைப்புடி கொண்ட குளியலறை கழுவும் பிரஷ் மார்கெட்டில் கிடைக்கிறது. அதை வைத்து எந்த ஒரு பொருளும் சேர்க்காமல் சாதரணமாக தேய்த்து விடவும்.இவ்வாறு செய்வதால் சோப்பு படிந்து வழுக்கி விடாமல்,கரைபடியாமல் இருக்கும். பிறகு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை தேவையான திரவம் அல்லது சோப்பு தூள் கொண்டு சுத்தம் செய்து கொள்ளும் போது வேலை எளிமையாக முடியும்.

Comments