Posts

Showing posts with the label வீட்டு_வேலைகள்

பெண்களே வீட்டு வேலைகளை எளிமையாக செய்வது எப்படி?

Image
நமது தாத்தா பாட்டி காலங்களில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். அதனால் வீட்டீல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை செய்ய வீட்டு வேலை எளிமையாக, மனஅழுத்தமின்றி, ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே சுலபமாக வேலையை செய்து முடிப்பார்கள். ஆனால் இன்றோ நாம் தனிகுடும்ப வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு ‌வீட்டு வேலைகளை தனியாக செய்யும் போது நிறைய  மனஅழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறோம். அவ்வாறு மன அழுத்தம் இன்றி எளிமையாக வீட்டு வேலைகளை செய்ய சில குறிப்புகளை பார்க்கலாம்.   1.பாத்திரம் கழுவுதல் : வீட்டு வேலைகளில் பாத்திரங்களை கழுவுதல் சிறு கடினமானது தான். அவ்வாறு நீங்கள் பாத்திரங்கள் கழுவும் போது சேர்த்து வைத்து கழுவாமல் உடனுக்குடன் கழுவி விடுங்கள்.‌நிறைய பாத்திரங்களை சேர்த்து வைத்து கழுவும் போது உடலும் சோர்வாகி விடும். நேரமும் அதிகம் எடுத்துக் கொள்ளும். இரவில் படுக்க செல்லும் முன்னர் பாத்திரங்களை கழுவிவிட்டு படுங்கள் அப்படி செய்தால் காலையில் மன அழுத்தம் இன்றி எழலாம். 2.வீட்டை சுத்தம் செய்தல்: வீட்டை தினமும் கூட்டாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் கூட்டுங்கள். தேவைப்பட்டால் வரவேற்பு அறை, சாமியறை, சமை...