ஆடிப்பெருக்கு 2022: ஆடி 18 எப்போது? - Aadi Perukku 2022
ஆடிப்பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடியின் 18 வது நாளில் கொண்டாடப்படும் ஒரு தமிழர் பண்டிகையாகும். ஆடிப்பெருக்கு 2022ல் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி, (ஆடி 18) புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு விழா காவிரி ஆற்றங்கரையில் வசிக்கும் குடும்பங்களால் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டாக சேர்ந்து காவேரி தாயை வழிபடுகின்றனர். பக்தர்கள் புனித நீராடி புது ஆடைகள் அணிந்து காவிரி ஆற்றங்கரையில் உள்ள குளித்தலைகளில் சில சடங்குகளை செய்கின்றனர். இதைத் தொடர்ந்து காவேரி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது.புதுவெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை தன்னை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவன் அமையும் என்றும், திருமணமான பெண்ணின் கணவனுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுப்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு
நன்னாளில் பெண்கள் பார்வதி தேவியை வழிபடுவார்கள். பல்வேறு வகையான அரிசி
உணவுகள் தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேங்காய்
சாதம், இனிப்புப் பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் புளி
சாதம் போன்ற பிரசாதங்கள் செய்து பக்தர்கள் அன்னதானம் வழங்குகின்றனர்.
அக்ஷதை மற்றும் மலர்களால் புனித நதியான காவிரியை வழிபடுகின்றனர்.
Thanks for sharing aadi perukku date
ReplyDeleteஆடி பெருக்கு விழா காவிரி ஆற்றங்கரையில் களைகட்டும்.
ReplyDeleteஆடி பெருக்கு தமிழர்களின் சிறப்பு
ReplyDelete