ஆசிய கோப்பை 2022: இந்திய அணி விவரம், சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா?
இன்று தொடங்கும் ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. தகுதிச் சுற்று போட்டியில் ஹாங்காங் அணியானது யுஏஇ அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்குள் இடம்பிடித்துள்ளது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியாவுக்கு முதல் போட்டியே இந்தியா vs பாகிஸ்தான் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆசிய கோப்பைக்கான முழு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகும். அதேபோல் இணையத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் ஆசிய கோப்பை போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பாகும்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய்.
Comments
Post a Comment